பதுளை – கிராந்துருகோட்டை பகுதியில் புதையல் பொருட்களை தேடி அகழ்வில் ஈடுபட்ட மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிராந்துருகோட்டை ஹங்கலஓய பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, 29 முதல் 38 வயதுக்கு இடைப்பட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.