NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கிரிக்கெட் வரலாற்றில் முதன் முறையாக சிவப்பு அட்டை பெற்ற வீரர் !

கிரிக்கெட்டில் கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட புதியவிதியின்படி நேற்று(27) இந்திய வீரர் சுனில் நரேன் சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார். முதலாவது சிவப்பு அட்டை வீரர் என்ற பெயர் அவர் மீது பதியப்பட்டுள்ளது.

கொடுக்கப்பட்ட நேரத்துக்குள் ஒரு அணி பந்துவீசி முடிக்காவிட்டால் மைதானத்தின் உள்ளே இருக்கும் நடுவர் சிவப்பு அட்டை காட்டுவார். அதன்படி, அந்த அணியின் கப்டன் யாராவது ஒரு வீரரை வெளியே அனுப்ப வேண்டும்.

கரீபியன் பிரிமியர் லீக்கில் இந்த முறை சிவப்பு அட்டை அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் – செயின்ட் கிட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில் முதன் முறையாக சிவப்பு அட்டை விதி பயன்படுத்தப்பட்டது.

முதலில் பந்துவீசிய பொல்லார்ட் தலைமையிலான டிரின்பாகோ அணி கொடுக்கப்பட்ட நேரத்தினுள் 20 ஓவர்களை வீசவில்லை. இதனால், களநடுவர் 20வது ஓவர் வீசும்முன்பு மைதானத்தில் சிவப்பு அட்டையைக் காட்டினார்,

 கடைசி ஓவரில்கப்டன் பொல்லார்ட் சுழற்பந்துவீச்சாளர் சுனில் நரைசுனை வெளியில் அனுப்பினார். மேலும், அந்த அணி 2 அவுட் பீல்டர்களுடன் வெறும் 10 வீரர்களுடனே கடைசி ஓவரில் பீல்டிங் செய்தது. ஆனாலும், இந்த போட்டியில் பொல்லார்ட் தலைமையிலான டிரின்பாகோ அணி வெற்றி பெற்றது.

Share:

Related Articles