கிளப் வசந்த கொலையுடன் தொடர்புடைய இரண்டு முக்கிய சந்தேக நபர்களை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களில் ஒருவரென அடையாளம் காணப்பட்ட 31 வயதுடைய பதி ஆரம்பகே அஜித் ரோஹண தெஹிவளை – கௌடானையில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
இவருடன், துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் கதிர்காமத்திற்குத் தப்பிச் செல்ல உதவியதாகக் கூறப்படும் 29 வயதான தாருகா வருண இந்திக்க டி சில்வாவும் அதுருகிரியவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தக் கைது நடவடிக்கையின் போது பொலிஸ் அதிகாரிகள் வு56 ரக துப்பாக்கி, 120 தோட்டாக்கள் மற்றும் பிஸ்டல் தோட்டாக்களையும் மீட்டுள்ளனர்.