NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தின் காரணமாக 11,728 பேர் பாதிப்பு..!

கிளிநொச்சி மாவட்டத்தின் தற்பொழுது வெள்ள அனர்த்தத்தின் காரணமாக 3812 குடும்பங்களைச் சேர்ந்த 11728 அங்கத்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் இவர்கள்  இடைத்தங்கல்  13 இடைத்தங்கள் முகாம்கள்  அதில் 320 குடும்பங்களைச் சேர்ந்த910 அங்கத்தவர்கள் இடைத்தங்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கான சமைத்த உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும் தற்பொழுது வரை ஏற்பட்டுள்ள அர்த்தங்கள் காரணமாக பகுதி அளவில் 25 வீடுகள் சேதம் அடைந்துள்ளதாகவும் இதில் உறவினர் வீடுகளில் 2098 குடும்பங்களைச் சேர்ந்த 6570 அங்கத்தவர்கள் உறவினர்களின் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் 

தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் இரணைமடு குளத்தின் மேலதிக நீர் வெளியேற்றப்பட்டு வருவதன் காரணமாக கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் பெரும்போக நெற்செய்கையில் ஈடுபட்ட பல  விவசாயிகளின் நெற்செய்கை வெள்ளத்தில் மூழ்கி கடல் போல் காட்சியளிக்கின்றது அத்துடன் தற்பொழுது அதிகமான குளிருடன் கூடிய காலநிலைகாணப்படுவதாகவும்புகைமூட்டம் போல் காட்சி அளிப்பதுடன்வீதிகளில் பயணிக்கும் சாரதிகள் மிகவும் சிரமங்களை எதிர்நோக்குவதாக தெரிவித்துள்ளனர்

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles