கிழக்கு மாகாணத்தில் ஞாயிறு மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தனியார் வகுப்புகளை நடத்துவது தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மாகாண கல்விச் செயலாளர் விடுத்துள்ள சுற்றறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த சுற்றறிக்கையில் மேலும், சமயக் கல்வியில் ஈடுபடுவதற்கு போதிய கால அவகாசம் இல்லாத வகையில் தனியார் வகுப்புகள் நடத்தப்படுவதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனால், ஞாயிற்றுக்கிழமைகளில் பிற்பகல் 2 மணி வரையிலும், மழை பெய்யும் நாட்களில் முழு நாளும் வகுப்புகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் ஆராய வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் பொலிஸ் மற்றும் சம்பந்தப்பட்ட உள்ளுராட்சி மன்றங்களின் உதவியை நாடுமாறு சுற்றறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.