கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதற்கு திகதி மற்றும் நேரத்தை ஒதுக்காத எவரும் திணைக்களத்திற்கு வரவேண்டாம் எனவும், திகதி மற்றும் நேரத்தை ஒதுக்கியவர்கள் மாத்திரம் ஆவணங்களை சமர்ப்பிக்க முடியும் எனவும் குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய நேற்று (12) தெரிவித்தார்.
எனினும், மருத்துவ சிகிச்சைகளுக்காக வெளிநாடு செல்ல உள்ளவர்கள் மற்றும் இரண்டு அல்லது மூன்று வார விடுமுறையில் வெளிநாட்டில் இருந்து இலங்கை வந்து, கடவுச்சீட்டை தயார்ப்படுத்திக்கொள்ள உள்ளவர்கள் அதற்கான உரிய ஆவணங்களை காண்பித்து கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்ள செல்ல முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் இரு வாரங்களின் பின்னர் இலகுவில் கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்வதற்கான முறைமை ஒன்றை தயாரிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைய நாட்களாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் முன்னால் நீண்ட வரிசைகளை அவதானிக்க முடிகின்றமை குறிப்பிடத்தக்கது.