NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

‘குடு தனு’ கைது!

ஒரு கிலோவுக்கும் அதிகமான ‘ஐஸ் போதைப்பொருளுடன் ‘குடு தனு’ என்று அறியப்படும் பெண்ணொருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (STF) கைது செய்துள்ளனர்.

குறித்த பெண் தற்போது வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள போதைப்பொருள் பிரமுகரான “மாத்தரா கல்பா” என்பவரின் உதவியாளர் என்பது தெரியவந்துள்ளது. 

இவர் வெல்லம்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அங்கொட பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவரிடமிருந்து, ஒரு கிலோ 50 கிராம் எடையுள்ள ‘ஐஸ், போதைப்பொருள், மின்னியல் தராசு, போதைப்பொருள் விற்பனையில் சம்பாதித்த 12 ஆயிரம் ரூபா பணம் மற்றம் கைபேசி என்பன கைப்பற்றப்பட்டன.

சந்தேகநபர், கைப்பற்றப்பட்ட போதைப்பொருளுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Share:

Related Articles