உலகச் சுகாதார ஸ்தாபனம் குரங்கு காய்ச்சல் தொற்றுக்கான எச்சரிக்கை நிலையை உயர்த்தியுள்ளது.
சுவீடனில் குரங்கு காய்ச்சல் தொற்றுடன் நபரொருவர் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆபிரிக்காவிற்கு அப்பால் குரங்கு காய்ச்சல் தொற்று ஏற்பட்டிருக்கும் முதல் நாடு சுவீடன் என்று ஐரோப்பிய நோய்த் தடுப்பு, கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, குரங்கு காய்ச்சலுடன் பாகிஸ்தானிலும் நபரொருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், சீனா அடுத்த 6 மாதங்களுக்கு நாட்டுக்குள் நுழையும் பயணிகள் குறித்து அவதானம் செலுத்தவுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
அத்துடன், ஆபிரிக்காவில் குரங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்குத் தடுப்பூசிகளை வழங்குவதற்கு 500 மில்லியன் டொலர் வரை ஒதுக்கப்பட்டுள்ளதாக உலகச் சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.