NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

குருநாகல் நீதிமன்ற கட்டட வளாக கூரையின் மீது ஏறி தனிநபர் போராட்டம்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

குருநாகல் நீதிமன்ற கட்டட வளாகத்தின் கூரையின் மீது ஏறி நபர் ஒருவர் தனிநபர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

மெல்சிறிபுர பொலிஸ் நிலைய அதிகாரிகள், தமக்கு அநீதி இழைப்பதாக தெரிவித்து குறித்த நபர் இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்.

மதுபானம் அருந்தியுள்ள நிலையில், நீதிமன்றின் கூரையின் மேல் அவர் ஏறி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸ் உத்தியோகத்தர்களுடன், குருநாகல் மாநகரசபையின் தீயணைப்பு படை வீரர்களும் இணைந்து குறித்த நபரை கீழே இறக்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

சட்டவிரோத மதுபானம் தொடர்பில் தம்மீது போலியான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளதாக அவர் பொலிஸார் மீது குற்றம் சுமத்தியுள்ளார்.

Share:

Related Articles