தபால் ஊழியர் சங்கத்தின் நடவடிக்கையால் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட கடிதங்கள் குவிந்துள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.
அந்த கடிதங்கள் எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் விநியோகிக்கப்படும் என ஒன்றிணைந்த தபால் ஊழியர் சங்கத்தின் அழைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்தார்.
ஊழியர் ஆட்சேர்ப்பு உள்ளிட்ட தமது கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்குவதற்கு எதிர்வரும் 24ஆம் திகதி வரை அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்கப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
24 மணி நேர அஞ்சல் ஊழியர் சங்க போராட்டம் நேற்று நள்ளிரவுடன் முடிவுக்கு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.