NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

குவைத் மன்னர் ஷேக் நவாஃப் காலமானார்!

குவைத்தின் மன்னர் (எமிர்) ஷேக் நவாஃப் அல்-அஹ்மத் அல்-சபா இன்று உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரச ஊடக செய்தி வெளியிட்டுள்ளது.

இறக்கும் போது அவருக்கு 86 வயது ஆகும். மூன்று ஆண்டுகள் ஆட்சியில் இருந்த அவர் நேற்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவைத் மன்னர்ஷேக் நவாஃப் அல்-அஹ்மத் அல்-சபாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கிறோம் என்று அரசு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2020ஆம் ஆண்டு குவைத் மன்னர் (எமிர்) ஷேக் சபா அல் அஹ்மத் அல் சபா, தனது 91ஆம் வயதில் காலமானதை அடுத்து ஷேக் நவாஃப் அல்-அஹ்மத் அல்-சபா ஆட்சிக்கு வந்தார்.

கடுமையான சவால்களுக்கு மத்தியில் அவர் ஆட்சிக்கு வந்தார். தனது ஆட்சிகாலத்தில் பல்வேறு இராஜதந்திர செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தார்.

ஷேக் நவாஃப் நீண்ட காலமாக குவைத்தின் அரசியல் மற்றும் அரச தொழில்களில் உள்ளார்ந்தவராக இருந்தார்.

ஜூன் 25, 1937 இல் பிறந்த ஷேக் நவாஃப், அல் முபாரகியா பாடசாலை உட்பட தாயகத்தில் உள்ள பல்வேறு பாடசாலைகள் கல்விப் பயின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles