NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கேரளா மண்சரிவு- மூன்றாவது நாளாகவும் தொடரும் மீட்புப் பணிகள்.

இந்தியா, கேரளா வயநாட்டில் கன மழை கொட்டித் தீர்த்தமையால் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமையன்று அடுத்தடுத்து ஏற்பட்ட மண்சரிவினால் ஏராளமான மக்கள் உயிருடன் மண்ணுக்குள் புதைந்தனர்.

மண் சரிவில் புதையுண்டவர்களை மீட்கும் பணிகள் மூன்றாவது நாளாகவும் தொடர்கின்ற நிலையில், பலி எண்ணிக்கை 282ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் மண்சரிவில் சிக்குண்ட 1500க்கும் அதிகமானோர் மீட்கப்பட்டுள்ளனர்.அனைத்து பகுதியும் சேறும், சகதியுமாக காணப்படுவதால் மீட்புப் பணிகளில் கடும் சிரமம் ஏற்பட்டு வருகின்ற நிலையில், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

கேரளாவை புரட்டிப் போட்டுள்ள இந்த இயற்கை பேரிடரில் பலியானவர்களுக்காக பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்

Share:

Related Articles