NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி – அகழ்வுப் பணிகள் நான்காவது நாளாக முன்னெடுப்பு!

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியின் மூன்றாங்கட்ட அகழ்வாய்வின், நான்காம் நாள் அகழ்வாய்வுச் செயற்பாடுகள் நேற்று (09) தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டது.

முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில், தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ, விசேட சட்ட வைத்திய நிபுணர் கனகசபாபதி வாசுதேவ கொக்கிளாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, கொக்குத்தொடுவாய் கிராம அலுவலர், வீதி அபிவிருத்தி அதிகார சபை உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட தரப்பினரின் பங்குபற்றுதல்களுடன் இந்த நான்காம் நாள் அகழ்வாய்வுகள் இடம்பெற்றன.

அந்த வகையில் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டதற்கு அமைவாக கொக்கிளாய் – முல்லைத்தீவு பிரதான வீதியின் மேல்படை அகழப்பட்டு, அகழ்வாய்வுச் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் கிரவல்படை வெளியேற்றப்பட்டது.

இதனை தொடர்ந்து அகழ்வாய்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles