வெசாக் பண்டிகை எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இதனை முன்னிட்டு நாடாளாவிய ரீதியில் பல்வேறு பகுதிகளில் தோரணம் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில், சீரற்ற வானிலை காரணமாக கொழும்பின் சில பகுதிகளில் நிர்மாணிக்கப்பட்டு வந்த தோரணம் இன்று (20) சரிந்து விழுந்துள்ளது.
இதன்படி, கொழும்பு – கொம்பனி வீதியில் நிர்மாணிக்கப்பட்டு வந்த தோரணம் சரிந்து விழுந்துள்ளது.
இதேபோன்று, கொழும்பு – காலிமுகத்திடலில் நிர்மாணிக்கப்பட்டுவந்த தோரணமும் சரிந்து விழுந்துள்ளது.
காலி முகத்திடலில் சரிந்து விழுந்த தோரணத்தின் ஆரம்ப பணிகள் முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் கடந்த 11 ஆம் ஆரம்பித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.