NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கொழும்பில் அதிகாலை பற்றி எரிந்த சுற்றுலா பேருந்து !

மட்டக்குளிய – இக்பாவத்தை பகுதியில் சுற்றுலா சென்ற தனியார் பேருந்து ஒன்று இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பேருந்தின் சாரதி மற்றும் உதவியாளர் ஆகிய இருவரும் வீதியில் பேருந்தினை நிறுத்திவிட்டு தேநீர் அருந்த சென்ற போதே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கண்டி நோக்கிச் சென்ற சுற்றுலா பேருந்தே இவ்வாறு தீப்பற்றி எரிந்துள்ளதாகவும், இதன்போது பேருந்தில் யாரும் இருக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ள அதேநேரம் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கொட்டாஞ்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles