(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
கொழும்பில் உள்ள வணிக வளாகத்தில் இரண்டு இந்திய பிரஜைகளுக்கு இடையில் நேற்று (05) இரவு ஏற்பட்ட கைக்கலப்பில் இந்திய பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார்.
லங்காதீப பத்திரிகை வெளியிட்டுள்ள குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, குறித்த நபர்கள் வணிக வளாகத்தில் உள்ள உணவகம் ஒன்றில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் இவர்களுக்குள் ஏற்பட்ட வாய்தர்க்கம் கைக்கலப்பாக மாறியதில் 28 வயதுடைய ஒருவர் படுகாயமடைந்த நிலையில், தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
29 வயதுடைய சந்தேக நபரை கைது செய்த பொலிஸார், அவரை கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.