(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
கொழும்புக்கும் இந்தியாவின் தமிழ்நாடு – மதுரைக்கும் இடையிலான விமான சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஆதன்படி, இந்தியாவின் ‘பட்ஜெட் கேரியர் ஸ்பைஸ்ஜெட்’ என்ற விமானமே நேற்று (20) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை மாதம் ‘ஸ்பைஸ்ஜெட்’ அதன் அதிகாரபூர்வ ஒன்லைன் முன்பதிவு முறையை ஆரம்பித்திருந்தது.
அதன்படி, நேற்று (20) முதல் வாரந்தோறும் 6 முறை மதுரை தொடக்கம் கொழும்பு விமான சேவையை மீண்டும் ஆரம்பிக்கும் திட்டத்தை உறுதிப்படுத்தியது.
இதன்படி ‘ஸ்பைஸ்ஜெட்’ இந்தியாவின் மதுரை மற்றும் கொழும்பு கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு இடையே புதன்கிழமைகளை தவிர வாரத்தில் ஆறு நாட்கள் விமான சேவைகளை முன்னெடுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.