NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கொவிட் தடுப்பூசியால் 11,000க்கும் அதிகமானோர் மரணம்!

கொவிட் வைரஸ் பரவலானது உலகளாவிய ரீதியில் பல மரணங்களை ஏற்படுத்தியது. இந்த ஆட்கொல்லி நோயை கட்டுப்படுத்தும் நோக்கில் தடுப்பூசிகள் தவணைகளின் அடிப்படையில் போடப்பட்டன.

இந்த தடுப்பூசிகள் கொவிட் வைரஸை ஓரளவு கட்டுப்படுத்தியது என்றாலும் நிறைய பேருக்கு பக்க இதனால் பக்க விளைவுகள் ஏற்பட்டன என்றும் கூறப்பட்டது.

வேலியே பயிரை மேய்வதுபோல், என்ற கருத்துக்கமைய கொவிட் வைரஸூக்காக செலுத்தப்பட்ட தடுப்பூசிகளினால் சுமார் 11,000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

2023ஆம் ஆண்டிற்கான ஐரோப்பிய மருந்துகள் முகமை வெளியிட்ட தகவல்களே இவ்வாறு கூறுவதாக கனடா மிரர் என்ற மின் இதழ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

அதன்படி ஃபைசர் தடுப்பூசி செலுத்தப்பட்ட 8,000 பேர் உயிரிழந்துள்ளதுடன் அஸ்ட்ராஜெனகா தடுப்பூசி செலுத்தப்பட்ட 15,000 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், அண்மையில் அஸ்ரா செனெகா (Astra Zeneca) தடுப்பூசியால் சில பக்க விளைவுகள் ஏற்படலாம் என இருநிலைப்பாட்டுடன் அதனை தயாரித்த நிறுவனமே ஏற்றுக்கொண்டது.

உலகளாவிய ரீதியில் சுமார் மூன்று பில்லியனுக்கும் அதிகமானோருக்கு இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டதன் பின்னரே இந்த தடுப்பூசி மீளப்பெறப்பட்டது.

தயாரித்த நிறுவனமே இரு நிலை மனப்பாங்குடன் தடுப்பூசி குறித்து கருத்து கூறியமை உலகம் முழுவதும் பேசுபொருளாக மாறியதுடன் ஏனைய தடுப்பூசிகளுக்கு எதிராகவும் எதிர்ப்புகள் எழுந்துள்ளது.

அஸ்ட்ரா செனெகா தடுப்பூசி சிறந்தது என சில நிபுணர்கள் தமது கருத்தை தெரிவித்திருந்தாலும், இந்த தடுப்பூசியை உடலில் செலுத்திய பின்னர் இரத்தம் உறைதல் ஏற்பட்டு சுமார் 81 இறப்புக்கள் பதிவாகியாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர பொதுமக்களுக்கு செலுத்தப்பட்ட ஏனைய கொவிட் தடுப்பூசிகளினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இவற்றைவிடவும் அதிகம் எனவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles