NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கோடையில் Mobile heat ஆகாமல் இருக்க இதை செய்யுங்கள் !

அதிக வெப்பம் காரணமாகவே ஸ்மார்ட்போன்கள் (Smartphone) வெடித்து சிதறுகின்றன. ஸ்மார்ட்போனில் இருக்கும் பேட்டரியை எப்போதும் கூலாக வைத்திருந்தாலே வெடிப்பை எளிதாக தவிர்க்க முடியும். 

வெயிலில் நடந்தோ அல்லது பைக்கிலோ செல்லும்போதும், நீண்ட நேரம் சூரிய ஒளியில் நிற்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்போதும், தொடர்ந்து செல்போன் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அல்லது பயன்படுத்தும் நேரத்தை குறைத்துக் கொள்ள வேண்டும்.

பயன்படுத்தும் போது, செல்போன் மீது கட்டாயம் கவர்களை பயன்படுத்த மறக்கக் கூடாது . ஏனென்றால், செல்போன் கவர்களை பயன்படுத்தாமல், வெயிலில் நின்று கொண்டு பேசும்போது, சூரிய ஒளி நேரடியாக பேட்டரியை ஹீட்டாக்கும்.

கவர்கள் இருந்தால், சூரிய ஒளியில் இருந்து பேட்டரிக்கு பாதுகாப்பு கிடைக்கும். இதுமட்டுமல்லாமல் செல்போன் கவர்கள் விபத்தின்போது பேட்டரிகள் சேதமடைந்து வெடிப்பதை தவிர்க்கக் கூடியது.

வெயிலில் அலைந்து திரிந்துவிட்டு வீட்டிற்கு சென்ற உடன் ஃபேன் போட்டு காற்று வாங்குவோம். ஏனென்றால், உடல் வெப்பத்தை காற்று கட்டுப்படுத்தும். அதுபோல செல்போனுக்கு சார்ஜ் போடும்போதும் வெப்பம் கட்டுப்படுத்தப்பட வேண்டும். கோடையில், காற்றோட்டம் இல்லாத இடத்தில் செல்போனுக்கு சார்ஜ் செய்யாதீர்கள். குறிப்பாக, மதிய வேளையில் காற்றோட்டம் இல்லாத பட்சத்தில் சார்ஜ் செய்துகொண்டு செல்போன் பயன்படுத்துவதை தவிர்த்துவிடுங்கள்.

கோடையில் நன்றாக இருக்கும் செல்போன்களே அதிகமாக வெப்பமடையும் என்றால் பழுதடைந்த அல்லது சேதமடைந்த செல்போனில் நிலைமை எப்படி இருக்கும். குறிப்பாக பேட்டரி தொடர்பான பழுதில் இருக்கும் செல்போன்களை கோடையில் பெரும்பாலும் பயன்படுத்தாதீர்கள். தவிர்க்க முடியாத சூழலில் வீட்டிலோ அல்லது வெப்பம் குறைவான இடங்களிலோ பயன்படுத்தலாம்.

Share:

Related Articles