NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சட்டவிரோதமாக மோட்டார் சைக்கிள் பந்தயம்- 427,500 ரூபா அபராதம்.

பம்பலப்பிட்டி, காலி வீதி, டூப்ளிகேஷன் வீதி பகுதிகளில் பொழுதுபோக்கிற்காக அஜாக்கிரதையாகவும் அபாயகரமாகவும் மோட்டார் சைக்கிள்களை ஓட்டிச் சென்றதாக மோட்டார் சைக்கிள்கள் ஓட்டுனர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இவர்கள் வீதியில் சட்டவிரோதமாக மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட குழுவினருக்கு நீதிமன்றம் 427,500 ரூபா அபராதம் விதித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகத்திற்கிடமான 15 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களின் சாரதிகளின் அனுமதிப்பத்திரங்களை 6 மாதங்களுக்கு இடைநிறுத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.

Share:

Related Articles