NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சட்டவிரோதமான முறையில் துப்பாக்கிகளை வைத்திருந்த ஐவர் கைது..!

சட்டவிரோதமான முறையில் துப்பாக்கிகளை வைத்திருந்த ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது சட்டவிரோதமான முறையில் துப்பாக்கிகளை வைத்திருந்த 5 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிக்கவெரட்டிய, கொலன்ன, ஹபராதுவ, இங்கினியாகல மற்றும் பொத்துவில் ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

19, 29, 36, 53 மற்றும் 60 வயதுடைய சந்தேக நபர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மேலும், இது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share:

Related Articles