NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சந்தையில் தற்போது தேங்காய் ஒன்றின் விலை ரூ.130 – ரூ.180 வரையில் விற்பனை!

நாடளாவிய ரீதியில் தற்போது தேங்காய் விலை அதிகரித்துள்ளமையால் நுகர்வோர் கடுமையான சிக்கலுக்கு உள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சந்தையில் தற்போது தேங்காய் ஒன்றின் விலை 130 ரூபாய் முதல் 180 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. 

இந்த விலையேற்றம் அடுத்த வருடம் வரை தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தேங்காயின் விலையைக் கட்டுப்படுத்தும் வகையில், புறநகர்ப் பகுதிகளில் நடமாடும் வேன்களின் மூலம் தேங்காயை மானிய விலையில் விற்பனை செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

எவ்வாறாயினும், சந்தையில் தேங்காயின் விலை அதிகரித்துள்ளமையினால் தாம் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.

Share:

Related Articles