NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை!

சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவிற்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான எதிர்க்கட்சி, நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளது.

சபாநாயகர் நிகழ்நிலை காப்புச்சட்டத்தில் கையொப்பம் இட்டமைக்காக இந்த நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், லக்ஸ்மன் கிரியெல்ல, ஜி.எல். பீரிஸ், திஸ்ஸ அத்தநாயக்க, சந்திம வீரக்கொடி மற்றும் ஷான் விஜயலால் டி சில்வா ஆகியோர் நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையொப்பமிட்டுள்ளனர்.

Share:

Related Articles