NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சமையல் எரிவாயு விலையில் மாற்றம் இல்லை – லிட்ரோ

சமையல் எரிவாயு விலையில் ஒகஸ்ட் மாதம், எதுவித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லையென லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த 02 ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டது.

அதன்படி, 12.5 கிலோ கிராம் நிறையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 100 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை 3690 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டது.

அத்துடன் 05 கிலோ கிராம் நிறையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 40 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை 1482 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டது.

மேலும் 2.3 கிலோ கிராம் நிறையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 18 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை 694 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலதிக செய்திகள்

Share:

Related Articles