நாடளாவிய ரீதியில் அனைத்து அரச சேவையாளர்களும் நாளை பாரிய வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட அரச மற்றும் மாகாண அரச சேவையாளர்கள் சங்கங்கள் தீர்மானித்துள்ளன.
20 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு மற்றும் ஓய்வூதிய முரண்பாடுகளுக்கு உடனடி தீர்வு கோரியே இவ்வாறு வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே, எதிர்காலத்தில் 20 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு கோரி தனியார் மற்றும் அரை அரச துறைசார் பணியாளர்களும் தொழிற்சங்க நடவடிக்கையினை முன்னெடுக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.
இதேவேளை, அரச வைத்திய அதிகாரிகள் சங்கமும் அடுத்த வாரத்திற்குள் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக அச்சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.