NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சர்ச்சையில் சிக்கியுள்ள எம்.எஸ்.தோனி!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மகேந்திரசிங் தோனியின் இன்ஸ்டாகிராம் புகைப்படம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இந்தோனேசிய பயணத்தின் நிகழ்ச்சி நிரலில் இந்தியாவுக்கு பதிலாக பாரத் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதேபோல் G20 மாநாட்டு அழைப்பிதழிலும் இந்தியா என்ற பெயருக்கு பதிலாக பாரத் என இருந்தது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.

பாஜக தலைவர்கள், தொண்டர்கள் ‘பாரத்’ என்ற பெயருக்கு ஆதரவு தெரிவிக்கும் நிலையில், பிற கட்சியினர், தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் எம்.எஸ்.தோனியின் இன்ஸ்டாகிராம் புகைப்படம் தற்போது வைரலாகியுள்ளது.

இதற்கு காரணம் அதில் தேசியக் கொடியுடன் I am blessed to be a Bharatiya என உள்ளது தான். இதன் வாயிலாக தோனி மத்திய அரசின் பெயர் மாற்றத்திற்கு ஆதரவு அளிக்கிறார் என்று சமூக ஊடங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles