NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சர்வதேச T20 போட்டிகளுக்கு விடை கொடுத்த ஜாம்பவான்கள்!

சர்வதேச T20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோர் அறிவித்துள்ளனர்.

T20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை ஏழு ஓட்டங்களால் வீழ்த்தி இரண்டாவது முறையாக இந்தியா கிண்ணத்தை கைப்பற்றியிருந்தது.

இதன் பின்னர் இருவருமே தங்களின் ஓய்வை அறிவித்துள்ளனர். இறுதிப் போட்டியில் ஆட்டநாயகன் விருதை விருதை வெற்றி விராட் கோலி, இதுவே தனது கடைசி சர்வதேச T20 போாட்டி என தெரிவித்திருந்தார்.

“எதை அடைய வேண்டும் என நினைத்தோமோ அதை அடைந்துள்ளோம். இதுவே எனது கடைசி T20 உலகக் கிண்ணம், அடுத்த தலைமுறை பொறுப்பேற்க வேண்டிய நேரம் இது” என விராட் கோலி தெரிவித்திருந்தார்.

இதனிடையே, போட்டியின் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய இந்திய அணியின் தலைவர் ரோஹித் ஷர்மாவும் தனது ஓய்வை அறிவித்துள்ளார்.

“T20 போட்டிகளில் இருந்து விடைபெற இதைவிட சிறந்த நேரம் எதுவுமில்லை,” இது எனக்கு மிகவும் உணர்ச்சிகரமான தருணம். 

என் வாழ்க்கையில் இந்த ஒரு தருணத்திற்கான நான் மிகவும் ஆசைப்பட்டேன். இறுதியில் நாங்கள் இலக்கை அடைந்ததில் மகிழ்ச்சியடைகிறேன்” என்று அவர் கூறினார்.

இதேவேளை, இதுவரை 125 சர்வதேச T20 போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி 48.69 சராசரியுடன் 4188 ஓட்டங்களை குவித்துள்ளார்.

இதில் ஒரு சதம் மற்றும் 38 அரைச்சதங்கள் அடங்கும். மேலும் சர்வதேச T20 போட்டிகளில் அதிக முறை ஆட்ட நாயகன் விருது பெற்ற வீரர் என்ற சாதனையையும் விராட் கோலி படைத்திருக்கிறார். 

இதுவரை அவர் 16 முறை ஆட்டநாயகன் விருதை வென்றுள்ளார்.

அதேபோன்று 159 சர்வதேச T20 போட்டிகளில் விளையாடியுள்ள ரோஹித் ஷர்மா 32.05 சராசரியுடன் 4231 ஓட்டங்களை குவித்துள்ளதுடன் தற்போது T20 போட்டிகளில் அதிக ஓட்டங்களை குவித்த வீரர்களில் முதலிடத்தில் இருக்கின்றார்.

அத்துடன், ஐந்து சதங்கள் மற்றும் 32 அரைச்சதங்களையும் அவர் பெற்றுள்ளார். மேலும் 14 முறை ஆட்டநாயகன் விருது வென்றிருக்கிறார். 

இதேவேளை, இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டும் நேற்றையப் போட்டியுடன் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles