NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சவர்மா உட்கொண்ட சிறுமி பலி – தமிழகத்திலுள்ள ஹோட்டல்களை ஆய்வு செய்ய நடவடிக்கை!

இந்தியாவின் தமிழகத்தில் உள்ள ஹோட்டல்களை ஆய்வு செய்யுமாறு தமிழக அமைச்சர் சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தமிழகத்தின் நாமக்கல் மாவட்டத்தில் தனியார் ஹோட்டல் ஒன்றில் தனது குடும்பத்தினருடன் சவர்மா உள்ளிட்ட சில உணவு வகைகளை உட்கொண்ட 9ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் நேற்று உயிரிழந்திருந்தார்.

அதேநேரம், அவருடைய உறவினர்களும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக இந்திய ஊடங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

இந்த சம்பவத்தை அடுத்து நாமக்கல் மாவட்டம் முழுவதும் சவர்மா மற்றும் கிரில் சிக்கன் போன்ற உணவுகள் தயாரிப்பதற்கு தடை விதிக்கபட்டுள்ளது.

இதேவேளை, தமிழகம் முழுவதும் உள்ள ஹோட்டல்களில் ஆய்வு செய்யுமாறு சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.

இதன்போது, உரிய நெறிமுறைகள் பின்பற்றப்படாத மற்றும் தரமற்ற உணவுகளை விற்பனை செய்யும் ஹோட்டல்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கூறியுள்ளதாக இந்திய ஊடகங்கள் மேலும் செய்தி வெளியிட்டுள்ளன.

Share:

Related Articles