NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சவூதி அரேபியாவின் முதல் பெண் விண்வெளி வீராங்கனை விண்வெளி பயணமானார்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

சவூதி அரேபியா நாட்டின் முதல் பெண் விண்வெளி வீராங்கனை உட்பட இரு சவூதி அரேபியர்கள் முதல் தடவையாக தனியார் விண்வெளிப் பயணத்திட்டத்தின் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்குப் பயணமாகியுள்ளனர்.

மார்பகப் புற்றுநோய் ஆராய்ச்சியாளரான ரயன்னா பர்னாவியே விண்வெளிக்குச் சென்றுள்ள முதல் சவூதி அரேபியப் பெண்ணாவார்.

அக்ஸியோம் மிசன் 2 விண்வெளிப் பயணத்தின் மூலம் இவர் விண்வெளிக்குச் சென்றுள்ளார்.

நாசாவின் முன்னாள் பெண் விண்வெளியாளரான அமெரிக்காவின் பெக்கி வைட்சன் விண்கலத்தின் கொமாண்டராகவும் மற்றொரு அமெரிக்கரான ஜோன் ஷொப்னர் விண்கலத்தின் விமானியாகவும் இப்பயணக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலுள்ள கென்னடி விண்வெளி நிலையத்திலிருந்து நேற்று (21) மாலை (இலங்கை இந்திய நேரப்படி) இவர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தை நோக்கிப் புறப்பட்டனர்.

ஸ்பேஸ்எக்ஸ் தனியார் நிறுவனம் தயாரித்த ட்ரகன் 2 விண்கலம் மூலம் இவர்கள் பயணிக்கின்றனர்.

Share:

Related Articles