NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சாந்தனின் இறுதி கிரியை தொடர்பான தகவல்!

சாந்தனின் உடல் நேற்றையதினம்(01)  இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில்  சாந்தனின் இறுதிக்கிரியைகள் நாளை(03) இடம்பெறவுள்ளதாக நேற்றையதினம் செய்திகள் வெளியாகியிருந்த நிலையில்  இறுதிக் கிரியை இடம்பெறுவது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என அவரது சகோதரர் மதிசுதா தெரிவித்துள்ளார்.

அவரது பூதவுடலுக்கு மீள் உடற் கூற்றுப் பரிசோதனை செய்யப் பணிக்கப்பட்டுள்ளதால் இறுதிக் கிரியை இடம்பெறும் திகதியை உறுதிப்படுத்த முடியாதுள்ளதுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

இதேவேளை, உயிரிழந்த சாந்தனின் உடல், நேற்றையதினம் அவரது தாய் நாடான இலங்கைக்கு கொண்டுவரப்பட்டது.

கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக அவரது உடலம்  விமான சேவைக்கு சொந்தமான யூ.எல் 122 என்ற விமானம் ஊடாக நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

அவரது உடலை உறவினர்கள் உள்ளிட்ட நெருக்கமானோர் சென்று பொறுப்பேற்றுக் கொண்டனர்.

விமான நிலையத்தின் விதிமுறைகள் பூர்த்தியான பின்னர், நீர்க்கொழும்பு வைத்தியசாலைக்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles