(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
பெல்லன்வில ரஜமகா விகாரைக்கு அருகில் உள்ள வீதிகளில் பயணிக்கும் சாரதிகள் மற்றும் பொதுமக்கள் இன்று (17) முதல் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர்.
பெல்லன்வில ரஜமகா விகாரையில் வருடாந்த பெரஹெர ஆரம்பமாகவுள்ளமையால், இன்று முதல் எதிர்வரும் 20ஆம் திகதி வரை இரவு 7.00 மணிக்கு பெல்லன்வில விகாரையில் பெரஹெர ஆரம்பித்து வீதி உலா செல்லவுள்ளது.
ஊர்வலத்தின் போது விகாரைக்கு அருகில் உள்ள வீதிகள் மூடப்படவுள்ளதால் சாரதிகள் மற்றும் பொதுமக்கள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுகொண்டுள்ளனர்.