சிகிரிய குன்றுக்குள் நுழைவதற்கான படிகளை புதுப்பிப்பு செய்யும் நிர்மாணப் பணிகளுக்காக, 4 கோடி ரூபாய்க்கு யுனெஸ்கோ ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த நிதி அடுத்த மாதம் இலங்கைக்கு வழங்கி வைக்கப்படும் என மத்திய கலாசார நிதியம் தெரிவித்துள்ளது.
அதன்படி, தற்போது சிதிலமடைந்த நிலையில் உள்ள படிக்கட்டுகள் விரைவில் நவீனமயமாக்கப்பட உள்ளதாக மத்திய கலாசார நிதியம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, சிகிரியாவில் சுற்றுலாவை மேம்படுத்தும் விசேட திட்டமொன்றும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அதன் கீழ், சுற்றுலாப் பயணிகள் பயன்படுத்தும் முச்சக்கர வண்டிகளின் கட்டணத்தை ஒழுங்குபடுத்துவதும், சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டும் வகையில் குறிப்பிட்ட கட்டண முறையை அறிமுகப்படுத்துவதும் அவசியமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.