NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சிகிரியாவில் கரடி தாக்கி இருவர் காயம்..!

சிகிரிய – இலுக்வல பகுதியில் கரடி தாக்கி இருவர் காயமடைந்துள்ளதாக சிகிரிய வனவிலங்கு அலுவலகம் தெரிவித்துள்ளது.

காயமடைந்த இருவரும் தம்புள்ளை மற்றும் பொலன்னறுவை வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காயமடைந்த ஒருவர் தனது வீட்டின் பின்புறம் உள்ள கழிவறைக்கு சென்றபோது கரடியால் தாக்கப்பட்டுள்ளார்.

மற்றொருவர் செடி ஒன்றிற்கு அருகில் வெற்றிலை சாப்பிட்டுக் கொண்டிருந்த போது கரடியால் தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles