NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சிங்கப்பூரின் ஜனாதிபதியாக தர்மன் சண்முகரத்னம் இன்று பதவியேற்கிறார்!

சிங்கப்பூரில் கடந்த முதலாம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது.

இந்த தேர்தலில் இந்திய வம்சாவளியும், தமிழருமான தர்மன் சண்முகரத்னம் 70.4 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.

இதையடுத்து, சிங்கப்பூரின் 9ஆவது ஜனாதிபதியாக அவர் இன்று பதவியேற்க உள்ளார். பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

சிங்கப்பூர் நாணய சபையின் தலைவர், பிரதமரின் ஆலோசகர், துணை பிரதமர், நிதி அமைச்சர், கல்வி அமைச்சர், என அவர் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles