NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சிங்கப்பூர் நிறுவனத்திடம் 4 டீசல் கப்பல்களை கொள்வனவு செய்யும் இலங்கை!

அடுத்த நான்கு மாதங்களுக்கு 4 டீசல் கப்பல்களை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்திரத்திற்கு அமைய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நீண்டகால ஒப்பந்த முறையின் கீழ் விலைமனு கோரப்பட்டதுடன், ஐந்து விண்ணப்பங்களும் இதற்காக சமர்ப்பிக்கப்பட்டன.

குறித்த ஐந்து நிறுவனங்களில் M/s Petrochina International (Singapore) Pte.Ltd என்ற சிங்கப்பூர் நிறுவனத்துக்கு வழங்க எரிசக்தி அமைச்சர் வழங்கிய யோசனைக்கே அமைச்சரவை இவ்வாறு அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி இந்த ஆண்டு நவம்பர் மாதம் முதலாம் திகதி முதல் அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் 29 ஆம் திகதி வரை இந்த எரிபொருள் கொள்வனவு செய்யப்படும்.

Share:

Related Articles