NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சிங்கள இளைஞனின் நெகிழ்ச்சியான செயல் குறித்து குவியும் பாராட்டுக்கள்!

கொழும்பு – வெள்ளவத்தையில் சிங்கள இளைஞன் ஒருவரின் செயற்பாடு குறித்து சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

கல்கிஸ்சையில் இருந்து முச்சக்கரவண்டி மூலம் வெள்ளவத்தைக்கு சென்ற பெண் ஒருவர் தங்க நகை ஒன்றை தவறவிட்டுள்ளார்.

சுமார் பத்து இலட்சம் ரூபா பெறுமதியான தங்க சங்கிலி ஒன்றே இவ்வாறு தவறவிடப்பட்டுள்ளது.

பதிவுசெய்யப்பட்ட வாகன வலையமைப்பு ஊடாக சம்பத் என்ற சாரதியின் முச்சக்கர வண்டியில் குறித்த பெண் பயணித்துள்ளார்.

எனினும் பாதிக்கப்பட்டவர்கள் பதிவுசெய்யப்பட்ட வாகனத்தை தொடர்பு கொண்டு சம்பத் என்ற சாரதியிடம் இது குறித்து தெரிவித்துள்ளனர்.

தவறவிடப்பட்ட தங்க சங்கிலியை தன்னிடம் இருப்பதாகவும் கொண்டுவந்து தருவதாகவும் குறித்த சாரதி தெரிவித்துள்ளார்.

உரிய விலாசத்திற்கு கொண்டு வந்த தங்க சங்கிலியை சாரதி கொடுத்துள்ளதாகஇ நகையின் உரிமையாளர் சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தங்க நகையை கொண்டு வந்த கொடுத்த குறித்த சாரதி நேர்மையின் உச்சம் எனப் பலரும் பாராட்டியுள்ளனர்.

Share:

Related Articles