NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சினோபெக் நிறுவனத்தின் முதலாவது எரிபொருள் தொகுதி நாட்டை வந்தடைந்தது!



சீனாவின் சினோபெக் நிறுவனத்தினால் நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட முதலாவது எரிபொருள் தொகுதியை இறக்கும் பணி தற்போது இடம்பெறுகின்றது.

குறித்த தகவலை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை எரிவாயு நிலைய விநியோகஸ்தர்களுடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட பிறகு, சினோபெக் நாடு முழுவதும் 150 எரிவாயு நிலையங்களுடன் சில்லறை பெட்ரோலிய நடவடிக்கைகளைத்
தொடங்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles