NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சிறந்த வீர, வீராங்கனைக்கான ICC விருதுகள்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரரை தேர்வு செய்து வரும் நிலையில், ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைகளை தேர்வு செய்து தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகளை ஐசிசி அறிவித்திருந்தது.

இதில் நியூசிலாந்தின் மார்க் சாம்ப்மென், இலங்கையின் பிரபாத் ஜெயசூர்ய மற்றும் பாகிஸ்தானின் பகர் ஜமான் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டன.

இந்நிலையில் ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த வீரர் விருது பாகிஸ்தானை சேர்ந்த பக்கார் ஜமானுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதேபோல் சிறந்த வீராங்கனை விருதுக்கு தாய்லாந்தின் நருயெமோல் சாய்வாய், ஜிம்பாப்வேயின் கெலிஸ் நத்லோவ், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் கவிஷா எகோடகே ஆகியோரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டன.
இதில் ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த வீராங்கனை விருது தாய்லாந்தின் நருயெமோல் சாய்வாய்க்கு வழங்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles