NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சிறுமி வைஷாலி விவகாரம் – மூவரை கைது செய்ய நீதிமன்றில் கோரிக்கை!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிறுமி வைஷாலியின் கை மணிக்கட்டுடன் துண்டிக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் மூன்று பேரை உடனடியாக கைது செய்யுமாறு யாழ். நீதவான் நீதிமன்றில் கோரிக்கை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய சிறுமி சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகளால் குறித்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் துண்டிக்கப்பட்ட கை தொடர்பில் மருத்துவப் பரிசோதனை அறிக்கை மற்றும் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வைத்தியர் நிபுணர் குழு அறிக்கை மன்றுக்கு சமர்பிக்கப்படாத நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய விடுதி வைத்தியர், பெண் தாதி உத்தியோகத்தர், ஆண் தாதி உத்தியோகத்தர் ஆகிய மூவரை உடனடியாக கைது செய்து வழக்கை முன்னோக்கி கொண்டு செல்ல மன்று அனுமதிக்க வேண்டும் என சிறுமி சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் நேற்று(10) கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

இந்நிலையில் அடுத்த வழக்கில் இந்த விடயம் தொடர்பில் ஆராய்வதாக தெரிவித்த நீதிபதி ஏ ஏ.ஆனந்தராஜா வழக்கை நவம்பர் மாதம் ஏழாம் திகதிக்கு தவணையிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, யாழ். போதனா வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட சிறுமி வைசாலியின் கை மணிக்கட்டுடன் துண்டிக்கப்பட்டது.

இது தொடர்பில் யாழ் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு இடம்பெற்றுவரும் நிலையில் நீதிமன்றம் சிறுமி விவகாரம் தொடர்பில் ஆராய்ந்து மன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு மூன்று வைத்திய நிபுணர்களைக் கொண்ட குழுவொன்றை நீதிமன்றம் நியமித்தது.

இந்நிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது துண்டிக்கப்பட்ட கை தொடர்பில் மருத்துவப் பரிசோதனை அறிக்கை மற்றும் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வைத்தியர் நிபுணர் குழு அறிக்கை மன்றுக்கு சமர்பிக்கப்படவில்லை.

மேலும், சிறுமி சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் இவ்வாறு கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles