NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சிறுவர் பாதுகாப்பு பற்றிய தேசிய கொள்கை தொடர்பான செயலமர்வு திருகோணமலையில் இடம்பெற்றது!

சிறுவர் பாதுகாப்பு பற்றிய தேசிய கொள்கை தொடர்பான செயலமர்வு இன்று (07) திருகோணமலை மாவட் அரசாங்க அதிபர் காரியாலயத்தில் மாவட்டம் அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாராச்சி தலைமையில் நடைபெற்றது.

 இச் செயலமர்வினை மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாராச்சி ஆரம்பித்துவைத்ததுடன் செயலமர்வுக்கு வருகைதந்தவர்களின் அறிமுக நிகழ்வும் இடம் பெற்றது.

    தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட செயலமர்வில் சிறுவர்களுடன் தொடர்பான துறை சார்ந்த உத்தியோகத்தர்களான திருகோணமலை மாவட்ட பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், வலயக்கல்வி அலுவலகங்களில் கடமையாற்றும் சிறுவர் பாதுகாப்பு அதிகாரிகள், சமுக சேவை திணைக்களத்தில் கடமையாற்றும் சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள பிரதேச ஊடகவியலாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    திருகோணமலை மாவட்ட உதவி அரசாங்க அதிபர் எஸ்.சுதாகரன் சிறுவர் பாதுகாப்பு தொடர்பான தேசிய கொள்கை பற்றி அறிமுகம் செய்து வைத்தார் இதன் போது திருகோணமலை மாவட்ட சிறுவர் உள சமுக உத்தியோகத்தர் எம்.சம்ஸீத் சிறுவர் பாதுகாப்பு பற்றிய தேசிய கொள்கை தொடர்பாகவும், சிறுவர் உரிமைகள் சட்ட ரீதியான பாதுகாப்பு ஏற்பாடுகள் , சிறுவர் பாதுகாப்பு பற்றிய தேசிய கொள்கையினை நடைமுறைப்படுத்தும் குழுவினர் , போன்ற பல விடயங்களை விரிவாகக விளக்கினார் 

 அவரைத் தொடர்ந்து மூதூர் பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் எம். சாபி சிறுவர் உரிமைகள், சிறுவர் உரிமைகள் தொடர்பான சட்ட ரீதியாக பாதுகாப்பு ஏற்பாடுகளும் அதன் உப பிரிவுகள் ,சமவாயங்கள் தொடர்பாக தெளிவு படுத்தப்பட்டத்தினார் மேலும் சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் சிறுவர் உரிமைகள் தொடர்பாக பல்வேறு விடயங்களை தெளிவுபடுததினர் இறுதியாக பங்கு பற்றுனர்களின் சிறுவர் உரிமைகளை எவ்வாறு பாதுகாப்பு என்பது தொடர்பான கலந்துரையாடல் செயலமர்வு நிறைவுக் கொண்டுவரப்பட்டது.

Share:

Related Articles