மழை காரணமாக சிலாபம் நகரில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதன் விளைவாக சிலாபம் ஆனந்த தேசிய பாடசாலை மற்றும் சிலாபம் விஜய வித்தியாலயமும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சிலாபம் நகரில் பல வீதிகள் மற்றும் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும்தெரிவிக்கப்படுகிறது.
சிலாபம் நகரில் வடிகால் அமைப்பு அடைபட்டதால் இந்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர்.