NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சிவனொளிபாத மலைக்கான பருவக்கால யாத்திரை நாளை ஆரம்பம்!

2023 – 2024ஆம் ஆண்டிற்கான சிவனொளிபாத மலைக்கான பருவக்கால யாத்திரை நாளை (26) ஆரம்பமாகவுள்ளது.

சிவனொளிபாத மலை நிலையத் தலைவர், பெங்கமுவே தம்மதின்ன நஹிமியோ இதனை தெரிவித்துள்ளார்.

பெல்மடுல்ல – கல்பொத்தாவெல ஸ்ரீபாதரஜமஹா விகாரையில் வைக்கப்பட்டுள்ள கலசம், சமணதேவர் சிலை, ஆபரணங்கள் மற்றும் காணிக்கைகள் இன்று அதிகாலை இரத்தினபுரி பாலபத்தல, எரத்ன, அவிசாவளை, ஹட்டன், பலாங்கொடை, பொகவந்தலாவை ஆகிய பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, இம்முறை, யாத்திரைக்கு வரும் பக்தர்கள், ஸ்தலத்தை புனிதமான இடமாக கருதி, சுற்றுச்சூழலை பாதுகாக்குமாறும் அவர் பக்தர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles