NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சீகிரியாவின் அபிவிருத்தி திட்டத்திற்கு கொரியாவிடமிருந்து 2.4 பில்லியன் ரூபா உதவி!

சிகிரியாவின் பாதுகாப்பு நடவடிக்கைகளை விரிவுபடுத்தவும், சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் சிறப்புத் திட்டத்தை செயல்படுத்தவும் கொரியா சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் முன்மொழிந்துள்ளது.

சிகிரியா பாறைக்கு அணுகுசாலை மேம்பாடு, மாற்று அணுகுசாலை அமைத்தல், சிகிரிய அருங்காட்சியகம், ஹோட்டல் மற்றும் பற்றுச்சீட்டு பெறும் இடம் உள்ளிட்ட பல திட்டங்கள் உள்ளதாகவும், இந்த திட்டத்தின் மொத்த மதிப்பு 2.4 பில்லியன் ரூபா எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் ஆலோசனையின் பிரகாரம் மத்திய கலாசார நிதியத்திற்கும் கொரியா சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்திற்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திடவும் முன்மொழியப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்;டுள்ளது.

Share:

Related Articles