அவுஸ்திரேலியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சீன பிரதமர் லீ சியாங்கிற்கு அரசு முறை வரவேற்பு அளிக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதனையடு்த்து ஏராளமானோர் பாராளுமன்றம் வெளியே திரண்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.திபேத்தியர்கள் மற்றும் உய்குர் இஸ்லாமியர்களுக்கு எதிராக சீன அரசாங்கத்தால் நிகழ்த்தப்படும் மனித உரிமை மீறல்களுக்கு கண்டனம் தெரிவித்து அவர்கள் முழக்கம் எழுப்பியுள்ளனர்.
அவுஸ்திரேலியா அரசுடன் அண்மையில் ஏற்பட்ட முரண்பாட்டால் ஒரு இலட்சத்து 65 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான இறக்குமதிகளை சீனா தடுத்து நிறுத்தியது. இதனால் இருதரப்பு உறவுகளிடையே பாதிப்பு ஏற்பட்ட நிலையில் சீனப் பிரதமர் அவுஸ்திரேலியா சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.