NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சீன விஜயத்தின் இறுதி நாள் இன்று!

சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் அழைப்பின் பேரில் நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சீனா சென்றுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, தனது விஜயத்தின் வெற்றிகரமான முடிவைக் குறிக்கும் வகையில், இன்று (17) சீனாவின் சாங்டு பிராந்தியத்தில் உள்ள பல மின் உற்பத்தி தொழிற்சாலைகளைப் பார்வையிட உள்ளார்.

பின்னர், வறுமை ஒழிப்புக்கான மாதிரி கிராமம் ஒன்றைப் பார்வையிட ஜனாதிபதி திட்டமிட்டுள்ளார்.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சிச்சுவான் மாகாண செயலாளர் வாங் சியாவோஹயை (Wang Xiaohui) சந்திக்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று பிற்பகல் தேசிய அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் விவசாய மத்திய நிலையத்திற்கு விஜயம் செய்ய உள்ளார்.

இந்த நிகழ்வுகளில் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க ஆகியோரும் இணைந்துகொள்வர்.

Share:

Related Articles