NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சீனாவில் வேலையில்லா நிலைமை அதிகரிப்பு!

உலகின் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடான சீனாவில் இளைஞர்களின் வேலையில்லா நிலைமை அதிகரித்துள்ளது.

தற்போது 21.3 சதவீதம் இளைஞர்கள் அங்கு வேலை இல்லாமல் தவிப்பதாக நியூசிலாந்தின் விக்டோரியா பல்கலைக்கழகம் தனது ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இது கொரோனாவுக்கு முன்பு இருந்ததை விட சுமார் இரு மடங்கு அதிகம் ஆகும்.

இதற்கு அரசாங்கத்தின் முரண்பாடான சில கொள்கைகளே முக்கிய காரணம் என கூறப்படுகிறது. அதில் ஒன்று கிராமப்புற இளைஞர்களுக்கு சரியான வேலைவாய்ப்பு இல்லாதமை. மற்றொன்று ஒரே குழந்தை திட்டம் என்பனவாகும். இது கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னரே அரசால் கைவிடப்பட்டாலும் அதன் தாக்கம் மக்களிடம் இன்னும் உள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சீனாவில் ஏற்பட்டுள்ள இளைஞர்களின் வேலையில்லா நிலைமை உலகளாவிய விநியோக சங்கிலியிலும் கடும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே ஏனைய நாடுகளின் வெற்றிகரமான முயற்சிகளில் இருந்து சீனா உரிய முடிவை எடுக்க வேண்டும் என அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Share:

Related Articles