சீரற்ற காலநிலை காரணமாக மலையக மற்றும் மட்டக்களப்பு புகையிரத மார்க்கத்தின் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மார்க்கத்தில் பொலன்னறுவை வரையில் புகையிரத சேவையை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மலையக புகையிரத பாதையில் நானுஓயா வரையில் போக்குவரத்தை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புகையிரத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை, இன்று (27) காலை ஹட்டன் புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள புகையிரத பாதையில் பாரிய குப்பை மேடு ஒன்று சரிந்து வீழ்ந்துள்ளது.
குப்பை மேடு இடிந்து விழும் போது, புகையிரத உல்லாசப் பயணிகள் இதனைக் கண்டு புகையிரத நிலையத்திற்கு அறிவித்த காரணத்தினால், நானுஓயாவிலிருந்து கொழும்பு நோக்கிச் செல்லும் பயணிகள் புகையிரதம் நிறுத்தப்பட்டது.
புகையிரத தண்டவாளத்தில் விழுந்த குப்பைக் குவியலை அகற்றிய பின்னரே கொழும்பு நோக்கு புகையிரதம் பயணித்ததாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.