NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சீருடைகளுக்காக மீண்டும் சீனாவிடம் உதவிக்கோரும் இலங்கை!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

அடுத்த வருடத்திற்கான பாடசாலை மாணவர்களுக்கு தேவையான முழு அளவிலான சீருடைகளை இலவசமாக வழங்குமாறு கல்வி அமைச்சு சீன தூதரகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

தற்போதுள்ள சூழ்நிலை காரணமாக அடுத்த வருடத்திற்கு தேவையான சீருடைகளை வழங்குவதில் ஏற்பட்டுள்ள சிக்கல் காரணமாகவே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கல்வியமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்தவினால் கடந்த வருடம் சீனத் தூதரகத்திலிருந்து விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக இவ்வருடம் 88,866,299 மீற்றர் சீருடை பெறப்பட்டு அனைத்து மாணவர்களுக்கும் விநியோகிக்கப்பட்டன.

பெறப்பட்ட தொகை மொத்த தேவையில் 70 சதவீதம் ஆகும். அனைத்து மாணவர்களுக்கும் விநியோகித்த பிறகும், இன்னும் கணிசமான தொகை மீதம் உள்ளதால், அந்தத் தொகையை வறிய மாணவர்களுக்கும் பகிர்ந்தளிக்க அமைச்சு திட்டமிட்டுள்ளது.

வறிய மாணவர்கள் இருக்கும் பாடசாலைகள் குறித்து அமைச்சு தற்போது விசாரணை நடத்தி வருகிறது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles