NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சுரங்கத்திற்குள் கடல் நீரை செலுத்தும் இஸ்ரேல் இராணுவம்!

ஹமாஸ் பயங்கரவாதிகளை ஒழிக்கும் வரை போர் ஓயாது எனக்கூறி இஸ்ரேல் ராணுவம் காசா மீது பயங்கரமான தாக்குதலை நடத்தி வருகிறது.

வடக்கு காசா அடையாளம் தெரியாத வகையில் உருக்குலைத்துள்ளது.

என்றபோதிலும் வீடுகள், மருத்துவமனைகள், வழிபாட்டு தலங்கள் ஆகியற்றுடன் சுரங்கங்கள் அமைத்து ஹமாஸ் அமைப்பினர் மறைந்து இருந்து, இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவதாக இஸ்ரேல் ராணுவம் குற்றம்சாட்டி வந்தது. அதற்கு ஏற்ப பல்வேறு வீடியோ ஆதாரங்களை வெளியிட்டு வந்தது.

ஹமாஸ் பயங்கரவாதிகள் ரகசிய சுரங்கத்திற்குள் பிணைக்கைதிகளை வைத்திருக்கலாம். அவர்கள் மறைந்து இருக்கலாம். ஆயுதங்களை மறைத்து வைத்திருக்கலாம் என இஸ்ரேல் நம்புகிறது.

இந்நிலையில், ஹமாஸ் அமைப்பினரின் சுரங்கத்திற்குள் கடல் நீரை செலுத்தும் பணியை இஸ்ரேல் இராணுவம் மேற்கொண்டு வருவதாக அமெரிக்க பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த நடவடிக்கை சுரங்கங்களை அழிக்க பயன்படும் என சில அமெரிக்க அதிகாரிகள் கூறியதாகவும் அந்த பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால், இஸ்ரேல் ராணுவம் இதுகுறித்து கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.

Share:

Related Articles