NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சுற்றுலாத்துறை வருமானம் 53.2%ஆக அதிகரிப்பு!

2024 ஆம் ஆண்டில் நாட்டின் மொத்த சுற்றுலாத்துறை வருமானம் 53.2% அதிகரித்துள்ளதாக  இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டில், 1,487,303 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ள நிலையில், இதனூடாக பதிவு செய்த மொத்த வருமானம் 2,068 மில்லியன் டொலர்கள் ஆகும்.

2024 ஆம் ஆண்டில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 2,053,465 ஆக பதிவான நிலையில், இதனூடாக இலங்கை 3,168.6 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தைப் பதிவு செய்துள்ளது. இது ஆண்டு அடிப்படையில் 53.2% வளர்ச்சியாகும்.

2024 டிசம்பரில் சுற்றுலாத்துறை வருமானம் 362.1 மில்லியன் டொலர்களாக பதிவாகியுள்ளது. 2023 டிசம்பரில் இதன் மதிப்பு 269.3 மில்லியன் டொலர்களாக பதிவானதாக இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles